• Sat. May 4th, 2024

சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டு

Byதரணி

Mar 26, 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய போக்சோ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 9 போக்சோ வழக்குளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் பெற்றுத்தர தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திருமதி. முத்துலெட்சுமி மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 3 எதிரிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்து ரூபாய் 14,92,000/-மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றி மேற்படி வழக்கின் 1வது எதிரியை குண்டர் தடுப்பு காவல் மூலம் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் . முத்துராமன், உதவி ஆய்வாளர் . முத்துராஜா, தலைமை காவலர்கள் பாலமுருகன், . பிரபாகரன், பசுவந்தனை காவல் நிலைய முதல் நிலை காவலர் . சரவணன் மற்றும் நாரைக்கிணறு காவல் நிலைய காவலர் . மாரிச்செல்வம் ஆகியேரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஆத்தூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 1,00,000/- அபராதமும் பெற்றுத்தர உதவியாக இருந்த அப்போதைய (தற்போது கோவில்பட்டி மேற்கு) காவல் ஆய்வாளர் . கிங்ஸ்லி தேவ் ஆனந்த், ஆத்தூர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி. பொன்முத்துமாரி மற்றும் காவலர் . ராஜபாண்டியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பிடியாணை எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த கோவில்பட்டி கிழக்கு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையற்கரசி, உதவி ஆய்வாளர் திரு. காந்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் . கனகசுந்தரம், பெண் தலைமை காவலர் திருமதி. சேதுலெட்சுமி, முதல் நிலை காவலர் . செல்லதுரை மற்றும் காவலர் . திருமேனி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 2 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்த வழக்கின் சொத்தான 13 ½ பவுன் தங்க நகைகள், 25 கிலோ வெள்ளி பொருட்களை மீட்ட விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . சுதாகர், முதல் நிலை காவலர் திரு. மாரீஸ்வரன், காவலர்கள் . கோட்டைமுத்து மற்றும் திரு. லிங்கராஜ் ஆகியோருக்கும் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த 2 எதிரிகளை கண்டுபிடித்து மும்பை சென்று கைது செய்த சேரகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . அந்;தோணி துரைசிங்கம், தலைமை காவலர் . செல்வம் மற்றும் முதல் நிலை காவலர் . வேல்முருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிக முக்கிய நபர்கள் வருகையின்போது வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க செய்தல் பணியினை சிறப்பாக செய்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவில் உள்ள உதவி ஆய்வாளர்கள் . முத்துகிருஷ்ணன், திரு. ஆதிலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் . சங்கரலிங்கம், . சிவசக்திவேல், . சுப்பிரமணியன், தலைமை காவலர்கள் . சிவராமலிங்கம், . பிரின்ஸ் பர்னபாஸ், முதல் நிலை காவலர்கள் . பாஸ்கர், திரு. பாரதி கண்ணன், . சரவணகுமார், . சுந்தர், காவலர்கள் . சுடலைமுத்து, . முத்துராஜ், . சிவா, . சண்முகவேல், . பிரபாகரன் மற்றும் . பொன்விஜய் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் சம்மந்தப்படட எதிரியை விரைந்து கைது செய்து அவரிடமிருந்த 34 ½ பவுன் தங்க நகைகளை மீட்ட குலசேகரன்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் . சுப்பிரமணியன், போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் . ராஜகுமார், ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் . இசக்கியப்பன், ஆத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் . சொர்ணராஜ் மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் . கார்த்திகேயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் எதிரிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர்கள் திருமதி. லெட்சுமி மற்றும் திருமதி. சரஸ்வதி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,கோவில்பட்டி உட்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள சுமார் 60 பிடியாணைகளில் 60 எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் . உலகநான் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி. முத்துமாரி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போக்சோ வழக்கில் போக்சோ நீதிமன்றத்தில் அனைத்து சாட்சிகளையும் சிறப்பாக சாட்சி அளிக்க வைத்து எதிரிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய தலைமை காவலர் . முத்துப்பாண்டி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 2 ½ வருடம் சிறை தண்டனையும், விபத்து வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் பெற்றுத்தந்தும், கோவில்பட்டி கிழக்குகாவல் நிலையத்தில்உள்ள 55 சம்மன்களை சார்பு செய்து அதில் 44 சம்மன்களை விசாரணைக்கு வரவழைத்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாரீச்செல்வம் மற்றும் முதல் நிலை காவலர் . அய்யாச்சாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்த சிப்காட் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் . பாலாகுமார் மற்றும் . மாதவன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
நேற்று (23.03.2023) விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் to மதுரை ரோடு பகுதியிலுள்ள ஒரு நகைக்கடையில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடிப்பதை பார்த்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்து எதிரிகளை பிடிப்பதற்கு உதவியாக இருந்த அந்த நகைக்கடைக்கு எதிரில் உள்ள கடையில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்த விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் நாகராஜ் (48) என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், போக்சோ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மற்றும் விளாத்திகுளம் பகுதியிலுள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்தவர்களை பற்றி தகவல் கொடுத்தவர் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் . கார்த்திகேயன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *