• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலை மர்ம நபர்கள் கைவரிசை

ByKalamegam Viswanathan

Mar 13, 2023

விக்கிரமங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலை மர்ம நபர்கள் கைவரிசை பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் நேற்று இரவு ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் இறந்த நாயின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விஷம் கலந்த உணவை மர்ம நபர்கள் ஆங்காங்கே வீசியதால் அதனை சாப்பிட்ட நாய்கள் உயிரிழந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது…