• Mon. Jan 20th, 2025

ஆளுநரை கண்டித்து வருகிற 17-ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்…!

ByS.Navinsanjai

Mar 13, 2023

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகிற 17-ஆம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி சவப்பெட்டி ஊர்வலம்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணாநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்பான மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் இளைஞர் எழுச்சி பொதுக்கூட்டமாக நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 44 மனித உயிர்கள் பரி போய் இருக்கிறது.ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்து நான்கு மாதங்களுக்கு பின்பு அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த இரண்டு மாத காலத்தில் மட்டும் 14 உயிர்கள் பறிபோய் இருக்கிறது.இதுகுறித்து தமிழக முதல்வர் குறிப்பிடுகையில் ஆளுநருக்கு வாய் இருக்கிறது காதில்லை என்று குறிப்பிட்டிருந்தார் இதைப் பற்றி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும் பொழுது ஆளுநருக்கு இதயம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.


உண்மையில் ஆளுநர் ஆர் என் ரவிக்கு இதயம் இருந்திருந்தால் அந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிருப்பார் மாறாக நிறுவன ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடப்பதற்கு காரணமாக இருக்கிறார்.இதனை கண்டித்தும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகிற 17-ஆம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி சவப்பெட்டி ஊர்வலத்தை நடத்த இருப்பதாகவும் அதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாஜகவில் இருந்து பிரமுகர்கள் பலரும் அதிமுகவில் இணைந்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எம்எல்ஏ அப்துல் சமது பதிலளிக்கையில் ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்குப் பின்னர் அந்த கட்சியின் நிர்வாகிகளாலேயே அக்கட்சி பிளவு பட்டிருக்கிறது அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக பெரும் தொகைகளை செலவழித்து பாஜகவில் இருந்து நிர்வாகிகளை இணைத்து வருகின்றனர் என்று கூறினார். நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் தொகையை அதிமுக தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் பாஜகவில் இருந்து சற்று விலகி இருக்கும் வகையில் அக்கட்சியிலிருந்து சிலரை இவர்கள் சேர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டை ஒரு வன்முறை மண்ணாக சித்தரிக்க வேண்டும் அதன் மூலம் ஏதாவது இந்த ஆட்சிக்கு நிகழுமா என்ற எண்ணத்தில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை அடிக்கிறார்கள் கொள்ளுகிறார்கள் என்று தவறான செய்திகளை பரப்பி ஒரு பதட்டத்தை உருவாக்கும் வேலை செய்தார்கள் இந்த வதந்திக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சிலர் மீது நடவடிக்கை தொடர்கிறது மேலும் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு இது போன்ற நச்சு சக்திகளை முலையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கையை வைப்பதாகவும் எம் எல் ஏ அப்துல் சமது செய்தியாளர்களிடம் கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் நிர்வாகிகள் பாபு,யூசுப் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.