• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

Byஜெ.துரை

Feb 27, 2023

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி சென்னை சென்ட் தாமஸ் மவுண்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியி அரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ்,குஜராத், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அநேக மாவட்டத்தில் இருந்தும் சுமார் 1500 மாணவர்கள் உட்பட இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியானது வயது அடிப்படையின் பிரிவில் தனித்தனியே தனித் திறமை போட்டியாக நடைபெற்றது இதில் ஒற்றை கொம்பு, இரட்டைக் கொம்பு, வேல்கம்பு ,செடி குச்சி , போன்ற சிலம்ப கலையும் இதில் இடம் பெற்றன.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து போதை மற்றும் செல்போனுக்கு அடிமையாகாமல் உலகத் தமிழ் பாரம்பரிய முதல் கலையான சிலம்ப கலையை கற்றுக் கொள்ள மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் ஊக்குவிக்க வைக்க வேண்டும் என்று சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கண்ணன் நம்மிடம் கூறினார்.