• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இன்று உதகை எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் மெகா கல்வி திருவிழா

உதகையில் உள்ள எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் 15க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்ட மெகா கல்வி திருவிழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் கல்லூரியில் எந்தவிதமான பாட பிரிவுகளை தேர்ந்தெடுப்பது என பல்வேறு சந்தேகத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் இன்று உதகையில் உள்ள எஸ்.ஆர்.வி.எஸ் பள்ளியில் 15க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்ட மெகா கல்வி திருவிழா மற்றும் கருத்தரங்கம் நடைப்பெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மேற்படிப்புக்கான பாட பிரிவுகளை பயிலுவது குறித்து ஆலோசனைகள் பெற்றனர்.