• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு!!

ByA.Tamilselvan

Feb 9, 2023

சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது. 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். . சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. கோவில் நடையை, மாலை 5 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 5 நாள்கள் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். இதற்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலை 5 மணி முதல், மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். பிப்ரவரி 17 வரை தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.