• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மகாத்மா காந்தி நினைவு தினம்

Byதரணி

Jan 30, 2023

திருப்பரங்குன்றத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக அண்ணல் மகாத்மா காந்திநினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்கீழரதவீதி பெரியரதவீதி சந்திப்பில் உள்ள வ. உ. சிதம்பரனார் நினைவு ஸ்தூபியில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது.இன்று ஆர் எஸ்எஸின் இந்து அமைப்பைச் சேர்ந்த கோட்சே என்ற கொடியவனால் அண்ணல் மகாத்மா காந்தி துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்ட தினம். அவருடைய நினைவு தினத்தை பொதுமக்கள் அனைவரும் அறிகின்ற வகையில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மேற்கு வங்காள முதலமைச்சர் அன்னை மம்தா பானர்ஜி ஆசியோடும் அகில இந்திய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆசியோடும் தமிழ்நாடு தலைவர் கலைவாணர் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் கல்யாண குமார் வழிகாட்டுதல் படியும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகத்திலேயே முதல்முதலாக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின்கொடியை ஏற்றிய பெருமை பெற்றுள்ள திருப்பரங்குன்றத்தில் மதுரை தெற்கு மாவட்ட அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக இன்று அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்திய திருநாட்டின் இறையாண்மையை போற்றுவோம் ஜாதி மத பேதமில்லாத மத்திய அரசை அமைக்க பாடுபடுவோம் இந்த நாளை தீவிரவாதிகளை எதிர்க்கின்ற நாளாக கடைப்பிடிக்க உறுதி ஏற்போம். என திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பி எஸ் சண்முகநாதன் திருப்பரங்குன்றம் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.