மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் இணந்து அரசு பள்ளியில் பயிலும் 500 மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்,நோட்டு புத்தகங்கள், மற்றும் 1000 பேருக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
இவ் விழாவானது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ஹென்றி தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு சிறப்பு விடுத்தினராக எழும்புர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், திநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.