• Wed. Mar 19th, 2025

குமரி அய்யா வழி சாமிதோப்பு தலைமை பதியின் தை மாதம் திருவிழா தேரோட்டம்

குமரி அய்யா வழி சாமிதோப்பு தலைமை பதியின் தை மாதம் திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது.பக்த்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உப்பு, தேங்காய்,வாழைப்பழம் இவற்றை தேரில் காணிக்கையாக செலுத்தினர்.

நிறுவன தலைவர் பாலஜனாதிபதி தேரில் நின்று பக்த்தர்களின் காணிக்கை பொருட்களை பெற்றுக்கொண்டார். நான்கு வீதிகள் திருத்தேர் சுற்றி வந்தது.பாதுகாப்பு பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். சீர் உடை அணியாத ஆண்,பெண் பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .