• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி 

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்
பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் உள்ள சீபோர்த் அம்புலி மலை எஸ்டேட் பகுதியில்  வசித்து வருபவர் நௌசாத் இவர் அங்கு உள்ள மஞ்ச ஸ்ரீ தனியார் எஸ்டேட்டில் பனிபுரிந்து வருகிறார்.இதே போல் அதே பகுதியில் வசித்து வருபவர்  ஜமால்  இவர்கள் இருவரும் காவக்காரர்களாக எஸ்டேட்டில் பனி புரிந்து வந்தனர். 
இன் நிலையில் மாலை நான்கு மணிக்கு வழக்கம் போல்  வேலைக்கு செல்லும் போது செடி மறைவில் இருந்த யானை இவர்களை கண்டதும் விரட்டி சென்றது இவர்களை குச்சி என்பவரது காப்பி தோட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் நௌஷாத்.வயது  40 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் உடன் சென்ற ஜமால் 55  விழந்ததில் படும் படுகாயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்..


  ஒரு வார காலத்தில் ஓவேலியில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஓவேலி பகுதியில் மட்டும் சுமார் 10 பேர் காட்டு யானை தாக்கியுள்ளது.பொதுமக்கள் இச்சம்பவம் காரணமாக பலியானவரின் உடலை வைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதால், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, கூடலூர் மக்கள் ஆவேசமடைந்துள்ளனர்…