நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் அரசு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.சம்பவம் அறிந்து தேவாலா காவல்துறையினர் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலமாக பந்தலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து சிசிடிவி வீடியோ உதவியுடன் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என தேவாலா காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பேருந்து பின்புற சக்கரத்தில் விழுந்த பதபதைக்கும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.