• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளிக் குழந்தைகள் உற்சாகம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் எல் கே ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் குழந்தைகளுடன் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன தலைமை ஆசிரியர் ஜெயந்தி மாணவர்களுக்கு பொங்கல் கொண்டாடப்படுவதற்கான காரணங்களை எடுத்துரைத்தனர்.

தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையில் ஒன்று. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும்; தமிழ்நாடு,இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிக சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் ,மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலையே பொங்கலில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விவசாயிகளின் செல்ல பண்டிகை. அவர்கள் அறுவடை செய்து நெல்லை அறைத்து, அரிசி எடுத்து,பால்,நெய் சேர்த்து; பானையிலிட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு, இன்பம் அடையும் விழாவே பொங்கல் திருநாளாகும்.இதை ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா.விவசாயம் இல்லையே உணவில்லை என தெரிவித்தார் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஆசிரியர்கள் குழந்தைகள் உற்சாகமாக கலந்து கொண்டு பொங்கல் உண்டு மகிழ்ந்தனர்.