• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவாவில் புதிய விமான
போக்குவரத்து தொடங்கியது

கோவாவின் வடக்கே உள்ள மோபாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 11ம் தேதி திறந்து வைத்தார். இதில் நேற்று முதல் விமான போக்குவரத்து தொடங்கியது. அதன்படி ஐதராபாத்தில் இருந்து 179 பயணிகளுடன் முதல் பயணிகள் விமானம் நேற்று காலையில் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் வந்த பயணிகளை முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரமோத் சாவந்த், மத்திய-மாநில அரசுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை. இன்று முதல் கோவாவில் 2 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என மகிழ்ச்சி தெரிவித்தார்.