• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக – தேமுதிக கூட்டணியா? – விஜய பிரபாகரன்

Byமதி

Oct 11, 2021

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி விழாவில் கலந்து கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன். அப்போது செய்தியாளர்கள் சந்தித்த அவர், “வெற்றி தோல்வி என்பது கட்சிக்குள் சகஜம். ஆகவே நிச்சயமாக தேமுதிக அதே எழுச்சியுடன் உள்ளது. கேப்டனுக்காக உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம். கேப்டன் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது.

மக்கள் இந்த முறை அங்கீகாரம் கொடுக்காததால் மட்டுமே தோல்வியை தழுவி உள்ளோம். எங்களது வாக்கு சதவீதம் குறையவில்லை என்பதால், விரைவில் எதற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைவோம்.

திமுக-வுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது வரை தி.மு.க ஆட்சி சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால் குறைந்த நாட்களைக் கொண்டு ஆட்சியின் தன்மையை கணிக்கவோ சொல்லவோ முடியாது. சிறிது காலம் சென்ற பின்னர் இந்த ஆட்சி பற்றிய தேமுதிக நிலைப்பாட்டை தெரிவிப்போம். தி.மு.க வுடன் கூட்டணி என்பது காலம் மட்டுமே பதில் சொல்லும் என்று கூறினார்.