• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது-உயர்நீதிமன்றம்!..

Byகாயத்ரி

Oct 10, 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக கோஷ்டி மோதல் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீஸார் ராஜேந்திர பாலாஜி உள்பட 10 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை, திருவில்லிபுத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. இந்த நிலையில் இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி மற்றும் 7 பேர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்துடன் முன்ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.