• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

குந்தா வட்டாட்சியர் முன்னிலையில்
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ் குந்தா கிராமம் பதட்டமான பகுதியாக உள்ளதால் குந்தா வட்டாட்சியர் இந்திரா முன்னிலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இந்த கார்த்திகை தீபத் திருவிழா டக்கர் ராஜேஷ், மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம ஆய்வாளர் தினேஷ், கிராம உதவியாளர் சிவசங்கர், ஆகியோர் பங்கேற்றனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டு கீழ் குந்தா பகுதியில் வெகுசிறப்பாக கார்த்திகை தீப திருவிழா அமைதியாக நடைபெற்றது.

ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தீப தரிசனம் செய்தனர். அம்மன் கோயில் பூசாரி டி.பி..ராஜன் தீபத்தை கொடுக்க விநாயகர் கோயில் பூசாரி என்.ராதாகிருஷ்ணன் கோயிலில் உள்ள தீப ஸ்தூபியில் கார்த்திகை தீபத்தை ஏற்றினார்.ஹர ஹர ஹர ஹர கோஷம் முழங்க தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை தீபத் திருநாள் இனிதே கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊர் தலைவர் முருகேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.