• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

ByA.Tamilselvan

Dec 4, 2022

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (5-ந்தேதி) உருவாகிறது.
தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் கூறும் போது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.அதன்பின்னர் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 8-ந்தேதி வட தமிழகம், புதுவை கடலோர பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.இதனால் தமிழகத்தில் பெரும்பாலன பகுதிகளில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.