• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் “நோ பார்க்கிங் காவல்துறை அதிரடி….

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு அத்துமீறும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக மஞ்சூர் காவல் நிலையம் மூலமாக தடுப்பு பதாகை நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்பட்டது.

ஆனால் அதையும் மீறி சில வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு நீண்ட நேரமாகியும் எடுக்கப்படுவதில்லை.
இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.