உதகையில் மாணவர்கள் விடுதி கட்டிட பணிகள் குறித்த தமிழக சட்டமன்ற நிறுவன ஆய்வுக் குழுவினர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் உதகை கூட்செட் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் விடுதி பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.இதனை அடுத்து பழமையான கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணி தாட்கோ துறை மூலமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டிட கட்டும் பணியை தமிழக சட்டமன்ற நிறுவன ஆய்வு குழுவினர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ் ஆர் ராஜா,மானாமதுரை சட்டமன்ற தொகுதி தமிழரசி மாவட்ட ஆட்சியர் எஸ் பி அம்ரித் உள்ளிட்ட சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.