- கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து, வாரம் முழுவதும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுது.
- தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- காவிரி நதியில் மருந்து தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள், பூச்சிக் கொல்லிகள் அதிக அளவில் இருப்பதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
- பைடன் அரசு மிகவும் பலவீனமாகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகவும் அதை சீனா சற்றும் மதிப்பதில்லை என்றும், இறுதியாக சீனாவுடன் போர் தொடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா வரும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
- 2021 இலக்கியத்துக்கான நோபல் பரிசை எழுத்தாளர் அப்துல்ரசாக் குருனாவுக்கு அறிவிப்பு.
- பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்தனர்.
- ‘நம்ம பீச், நம்ம சென்னை’ என்ற சென்னையை சேர்ந்த கடற்கரையையும் பொது கழிப்பிடங்களை சுத்தமாக வைக்க உதவும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கழிவறையை சுத்தம் செய்தார்.
- தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது .
- இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ’மெட்ராஸ்’ திரைப்படத்தையும், ஆர்யா நடித்த ’டெடி’ திரைப்படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.