• Mon. Nov 2nd, 2026

உசிலம்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை..,

ByP.Thangapandi

Feb 2, 2026

தமிழக வெற்றிக் கழகம் துவங்கி இன்று முதல் 3வது ஆண்டில் அடியடுத்து வைக்கும் சூழலில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களிடையே அரசியல் மாற்றத்திற்கான பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.,

இன்று மூன்றாவது ஆண்டை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள திருமுருகன் திருக்கோவிலில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம் தலைமையிலான மாவட்ட மற்றும் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், திருமுருகன் சிலை முன்பு தமிழக வெற்றிக் கழக கொடி மற்றும் சின்னமான விசிலை வைத்து சிறப்பு பூஜை செய்து, வழிபாடு செய்தனர்.,

மேலும் நிர்வாகிகள் விசில் சின்னத்தை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வண்ணம் நிர்வாகிகளுக்கு விசில்கள் வழங்கப்பட்டது., தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கும் விசில்களை வழங்கி கொண்டாடினர்.,