• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மறியல் 98பேர் கைது..,

ByKalamegam Viswanathan

Aug 10, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி சிஐடியு மாவட்ட தலைவர் அரவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கந்தவேல் ஒன்றிய செயலாளர் விவேக் சிஐடியு ஒன்றிய தலைவர் கணேசன் செயலாளர் பொன்ராஜ் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கருப்புசாமி பொருளாளர் அங்கையர்கன்னி தையல் சங்க நிர்வாகி இருளப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டமானது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தொடங்கி பெரிய கடை வீதி வழியாக பாரத ஸ்டேட் பேங்க் முன்பு ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்கம் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 98பேர் கைது செய்யப்பட்டனர் மறியல் போராட்டம் காரணமாக சோழவந்தான் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.