• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

97 சதவீதம் பேர் இ.பி.எஸ்தான் இருக்க வேண்டுமென்கிறார்கள்-மாபா பாண்டியராஜன்

ByA.Tamilselvan

Jun 22, 2022

அதிமுக தொண்டர்களில் 97 சதவீதம் பேர் இபிஎஸ் தான் விரும்புகிறார்கள் என் முன்னாள் அமைச்சர் மாபா .பாண்டியராஜன் பேட்டி.
இரட்டைத் தலைமை இல்லாமல் இருந்திருந்தால், கட்சிப் பணி இன்னும் தொய்வில்லாமல் நடந்திருக்கும். இந்த இரட்டைத் தலைமையால், கட்சிப் பணிகள் தொய்வடைந்தன. பல தருணங்களில் எடுக்க வேண்டிய முடிவுகள் எடுக்கப்படாமலேயே இருந்தன. இரு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இடையில் இருந்த வித்தியாசம் கட்சிக்கு ஒரு தளர்ச்சியாக இருந்தது.
அதிலிருந்து மாற வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டன் மனதிலும் இருக்கிறது. யார் அந்த ஒற்றைத் தலைமை என்ற கேள்வி வேண்டுமானால் சிலருக்கு இருக்கலாமே தவிர, 100 சதவீதம் பேரும் ஒற்றைத் தலைமையைத்தான் விரும்புகிறார்கள். 2- 3 சதவீதம் பேர்தான் ஓ.பி.எஸ். இருக்க வேண்டுமென்கிறார்கள். 97 சதவீதம் பேர் இ.பி.எஸ்தான் இருக்க வேண்டுமென்கிறார்கள் என்றார் அவர்

நன்றி – bbc tamil