மதுரை, பழங்காநத்தம் பகுதியில் இன்று அதிகாலையில் வெங்கடாசலபுரத்தை சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் தனது நண்பா் பழனிகுமாா் என்பவருடன் பழங்காநத்தம் டிவிஎஸ் நகா் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் அவா்களை வழிமறித்து வழிப்பறி செய்ய முயறனர். அப்போது தடுக்க முயன்ற செந்தில்குமாரை பீர்பாட்டிலால் தாக்கியதும் நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர்.
அவர்கள் வைத்திருந்த செல்போனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
சுதாரித்து எழுந்த செந்தில்குமார் மற்றும் பழனிக்குமார் இருவரும் வழிப்பறி கொள்ளையர்களை விரட்டி ஓடியபோது ஒரு வீட்டின் அருகே சென்று மறைந்து கொண்டார்.
ரத்த காயத்துடன் செந்தில்குமார் மற்றும் பழனிகுமார் இருவரும் உடனே சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூற உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டினை சோதனையிட்டபோது, அந்த வீட்டில் இருந்த சென்னையை சோ்ந்த பாஸ்கர் மகன் ஆனந்து, ரவிகுமார் மகன் சுபாஷ், சத்தியசீலன் மகன் குமார், கிருஷ்ண யோகேஸ்வரன், மற்றும் விவேக், கலைச்செல்வன், கருப்பசாமி என்ற மதன், குருசூரஜ், யோகேஸ்வரன் ஆகிய 9 பேரும் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை பயன்படுத்தி பெரிய அளவில் கொள்ளை அடித்து செல்ல திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து 9 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களின் முன்வழக்கு விபரங்கள் மற்றும் கைரேகை எடுக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் மதுரை மாநகரில் நடைபெற இருந்த கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டு உள்ளது என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளி ஊர்களில் இருந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.