சிவகங்கை நகரில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்தது. இந்நிலையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரமும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து காரைக்குடிக்கு சட்டமன்ற கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் காரணமாக சிவகங்கைக்கு வரவேண்டிய சட்டக்கல்லூரி காரைக்குடியில் அமையும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதில் சிவகங்கை நகரைச் சேர்ந்த பிரபல திரைப்பட மேதகு பட கதாநாயகன் குட்டிமணி தனது கையெழுத்தினை இட்டு பொதுமக்கள் ஆதரவை கோரினார்.
இதனால் ஓட்டு வாங்கிவிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மாவட்டத்தில் அதிக கல்லூரியை கொண்ட காரைக்குடிக்கு கொண்டு சென்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு இப்பகுதி மக்களிடையை எதிர்ப்பு அலை விசுவதால், காங்கிரஸ் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.