

மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப நகர்புற நல் வாழ்வு மையத்தை முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காணொலி காட்சி மூலம். திறந்து வைத்தார்.

ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட நல் வாழ்வு மையம் மகாலட்சுமி காலனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை அடிப்படையில திறந்துவைக்கப்பட்டது.உடல் பரிசோதனைக்கு வந்த கர்பிணி பெண்ணை குத்து விளக்கு ஏற்றவைத்த பெண் கவுன்சிலர்.நகர்புற நல் வாழ்வு மையத்தை 94வது மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்யன், உதவி பொறியாளர் மசூதனன். Dr.முருகேஸ்வரி ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.திறப்பு விழாவில் பரிசோதனைக்கு வந்த கர்பிணி பெண் ஈவான்ய காருண்ய என்ற பெண்ணை குத்து விளக்கு ஏற்றவைத்த கவுன்சிலர். பின்னர் நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம், உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

