திருவாடானை தாலுகா அலுவலகத்தில் இடிமின்னல் தாக்கி இறந்தவர்களுக்கு 8 லட்சம் நிவாரண நிதியை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஷெய்க் மன்சூர், தனித்துணை ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கந்தசாமி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மகாலிங்கம் என்பவர் சீந்திவயல் பேருந்து நிறுத்தம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதே போல் பெரிய கிராமத்தைச் சேர்ந்த பெரியய்யா மகன் பாண்டிச்செல்வம் என்பவர் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெய்த கன மழையில் வயலில் நெல் விதைத்துக் கொண்டிருந்த போது இடி மின்னல் தாக்கியதில் பலியானார்.
இதுகுறித்து திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பேரிடர் நிவாரண நிதிக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில் இருவருக்கும் தலா 4 லட்சம் வீதம் 8 லட்சம் ரூபாய்க்கான உத்தரவை இன்று வழங்கினார்கள். உடன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பலர் இருந்தார்கள்.