விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி பாண்டியன் அவருடைய மாமியார் கமலா( 83 வயது) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது, அப்போது அங்கு வந்த ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 1/2 பவுன் தங்க செயினையும் சுமார் 4 பவுன் எடையுள்ள ஒரு ஜோடி வளையலையும் பறித்து சென்று விட்டதாக கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய குற்ற 41/25 பிரிவு 309(4) BNS வாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.கண்ணன் BE உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் A. ராஜா மேற்பார்வையில் கிருஷ்ணன் கோயில் வட்ட காவல் ஆய்வாளர் தேவமாதா தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இராமநாதன், வன்னியம்பட்டி விலக்கு சார்பு ஆய்வாளர் சுந்தராஜ், மல்லி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகுபதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உட்கோட்ட குற்றப்பிரிவினர்கள் திருட்டு நடந்த இடத்தில் சென்று விசாரித்த போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெரிய விளையைச் சேர்ந்த பரமசிவம் மகன் கருப்பசாமி வயது 31 ( சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்) என விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்து மேலும் விசாரித்த போது, திருடு போன வீட்டில் வேலை பார்க்கும் தனது தாயார் சந்திரகலா என்பவர் மேற்படி சம்பவம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறினார். அவரையும் கைது செய்து சுமார் 3,40,000 மதிப்புள்ள பறித்து சென்ற சுமார் 8 1/2 பவுன் தங்கப் பொருட்களை கைப்பற்றியும் சம்பவத்திற்கு பயன்படுத்திய TN74BC7069 HERO SPLENDOR வாகனத்தை கைப்பற்றியும் சட்ட விதிகளுக்கு உட்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 பவுன் நகை பறிப்பு
