• Sat. Feb 15th, 2025

கல்வி உதவிக்கரம் நீட்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

Feb 3, 2025

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை சேர்ந்த அதிமுக மகளிர் அணி நிர்வாகி முத்துராணி, குமார் தம்பதியினரின் மகள் நந்திகாதேவி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ பயின்று வருகிறார். அவரது மேல் படிப்பிற்காக ரூபாய் 50,000 கல்வி உதவித்தொகையாக அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.