• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பாரதப் பிரதமரின் 75வது பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மடத்துப்பட்டி மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் பாரத பிரதமரின் 75 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி தலைமையில் மாவட்ட தலைவர் சரவணா துரை என்ற ராஜா முன்னிலையில் இயற்கை வளங்களையும் பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாமரம் வேப்பமரம் தென்னை மரம் உள்ளிட்ட 30 மரங்கள் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன .

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இராஜபாளையம் வடக்கு நகர தலைவர் ஜெமினி சுரேஷ் குமார் மற்றும் தெற்கு நகரத் தலைவர் பிரேம் ராஜா ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ் மாவட்ட செயலாளர்கள் கிருபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நகர மற்றும் ஒன்றியம் பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.