
உலக அமைதிக்காகவும் பெண்கள் பாதுகாப்பு தமிழ் மொழி பண்பாடு வளங்களை பாதுகாத்திடவும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி பிப்ரவரி 16 கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாரத்தான் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் சிவகங்கையைச் சேர்ந்த சிவக்குமார் ஆர்த்தி தம்பதியரின் இரண்டாவது மகனும் கே ஆர் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது மாணவர் பௌதின் சிவார்த்திக் 12 நாட்களில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதனை பாராட்டி மாண்புமிகு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் அவர்கள் கே ஆர் பெரிய கருப்பன் மாணவரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார் இந்நிகழ்வில் சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயராமன் உடன் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
