• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உதகை ஐயப்பன் கோவிலில் 67 வது தேர் திருவிழா

உதகையில் உள்ள ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின், 68 வது தேர் திருவிழா கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், அத்தாழ பூஜை, ஸ்ரீ பூதபலி, கணபதி ஹோமம், உஷ பூஜை நடந்தது. இதன் தேரோட்ட நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.
உதகை டவுன் டி.எஸ்.பி., மகேஸ்வரன் வடம்பிடித்து தேர் பவனியை துவக்கி வைத்தார்.பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். செண்டை மேளம் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரும் தேர், மாலையில் ஐயப்பன் கோவிலை வந்தடையும்.