• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உதகை மார்லிமந்து அணையின் தடுப்பு
வேலிகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம்

உதகை மார்லிமந்து அணை உதகை நகருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் நிலை தற்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த அணையை சுற்றி புதிய தடுப்பு சுவர் கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் தடுப்பு வேலிகளை பல நாட்களுக்கு முன் அகற்றியுள்ளது.
தற்போது அந்த சாலை கவரட்டி, உல்லத்தி, காரப்பிள்ளு, தாவெண உள்ளிட்ட கிராம புறங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால் கிராமபுறங்களுக்கு செல்லும் பேருந்துகள், காய்கறி தோட்டங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.