• Sat. Apr 20th, 2024

தேனீ கடித்து பலியான 63 பென்குயின்கள்

Byகுமார்

Sep 23, 2021

காலநிலை மாறுபாடால் பல்வேறு உயிரினங்கள் பலியாகி வரும் நிலையில் பென்குயின்கள் தேனீக்கள் கடித்து பலியான சம்பவம் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் அருகே இருக்கும் சைமோன்ஸ்டவுன் பகுதியில் உள்ள கடல் பகுதியில் தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. முதலில் இந்த பென்குயின்கள் சாப்பிட்ட உணவு காரணமாக பலியாகி இருக்கலாம் அல்லது வேறு காரணம் இருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதிக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விலங்குகள் நல மருத்துவர்கள் ஆகியோர் உடனடியாக வந்து, பென்குயின்களை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சோதனை செய்தனர். பென்குயின்களின் உடல்களில் விஷம் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் தடிப்புகளும், தேனீக்கள் கடித்த தடமும் இருந்தது. முழு சோதனையின் முடிவில் கொடூரமான தேனீ வகை ஒன்று கடித்ததில் இந்த பென்குயின்கள் பலியானது கண்டுபிடிக்கப்பட்டது. பென்குயின்களின் கண்களை சுற்றி தேனீக்கள் கடித்த காரணத்தால் இந்த மரணம் நிகழ்ந்து உள்ளதாக உடற்கூறு சோதனையில் முடிவு தெரிய வந்துள்ளது.

தேனீக்கள் சில பென்குயின்களை கடித்துவிட்டு அதே பகுதியில் பலியாகிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெப்பநிலை மாறுபட்டால் ஆர்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருக தொடங்கி உள்ளது. இதனால் அங்கு வாழம் கரடிகள், பென்குயின்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த நிலையில் பெங்குயின்கள் மரணம் இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *