‘பீஸ்ட்’, ‘வலிமை’ என மாஸ் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துவருகிறார் யோகி பாபு. ஹீரோவாக இவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. அதேநாளில், யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜையும் நடக்கிறது. இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து ஒவியாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை, ஓவியாவே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த படத்தின் பூஜைக்கான அழைப்பிதழையும் இணைத்துள்ளார். அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்பட்டத்தில், யோகி பாபுவும் ஓவியாவும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். செப்டம்பர் 24 ஆம் தேதி நடக்கும் பூஜைக்குப்பிறகுதான் இயக்குநர், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.