நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நடைபெற்ற பல்வேறு முறைகொடுகள் தற்போது அமாபலமாகி வருகிறது.
அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீட் பயிற்சி மையம் செய்துள்ள மோசடியை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியதாவது, “மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் பயின்ற ஐந்து மாணவர்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் நீட் தேர்வு எழுதியதுயுள்ளனர். மேலும் தேர்வர்களின் விவரங்கள், ஓ.எம்.ஆர்.தாள்களில் போலியாக திருத்தம் செய்து மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. கிரிமினல் சதி, மோசடி, ஆள்மாறாட்டம், ஆவணங்களைத் திருத்தி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது. ஹால் டிக்கெட்டில் புகைப்படங்களை மார்பிங் செய்து நீட் தேர்வு எழுதி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இங்கே மாணவர்கள் நீட்க்கு பயந்து உயிர்களை மாய்த்துக்கொள்ளும் அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் மாணவர்களை குற்றவாளிகளாக மற்றும் சுழலும் நிலவி வருகிறது.