• Wed. Mar 19th, 2025

பாகிஸ்தானில் முகாமின் மேற்கூரை இடிந்து 6 ஆப்கானியர்கள் உயிரிழப்பு !

ByP.Kavitha Kumar

Mar 10, 2025

பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமின் மேற்கூரை இடிந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த முகாமின் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் ள்பட 6பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் கண்ணியத்துடன் சொந்த நாடு திரும்ப வசதியாக, முன்பே போதிய நேரம் அளிக்கப்பட்டு விட்டது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்படி இல்லையென்றால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.