2021-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்கள் காரணமாக 54 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 11,636 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, திருநாவுக்கரசர், உத்தம சிகாமணி, செல்லகுமார், எஸ்ஆர்.பார்த்திபன், விஜய் வசந்த், ஜி.செல்வம் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்வி எழுப்பினர்.
இதற்க்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் 25.11.2021 தேதி நிலவரப்படி 54 பேரும், 6871 கால்நடைகளும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 0.51 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும் 11,636 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.