வருகிற ஜூன் 3 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது இது மூன்றாவது முறையாகும். விரைவில் தமிழக முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து அறிவிப்பு வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. எந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி அருகருகே இருக்கும் கடைகள் மற்றும் வருவாய் குறைந்த கடைகள் மூடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.