மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாரைப்பட்டி கிராமத்தில் உள்ளது அய்யனார் கோவில் பாறைப்பட்டி, வி பெரியகுளம், சரந்தாங்கி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 5 கிராம பொதுமக்கள் இங்கு பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகப்பன் என்பவர் தான் அறங்காவலர் என்றும் நீதிமன்ற ஆணை தன்னிடம் உள்ளதாகவும் யாரும் பொங்கல் வைக்க அனுமதி இல்லை என்று பொங்கல் வைக்க வருபவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது குறித்து ஐந்து கிராம பொதுமக்கள் கலந்து ஆலோசித்து நேற்று பொங்கல் வைப்பதாக இருந்தது நீதிமன்ற உத்தரவுப்படி பாறைப்பட்டி வி. பெரியகுளம், சாரந்தாங்கி மாணிக்கம் பட்டி, வெள்ளையம்பட்டி 5 கிராம பொதுமக்கள் கொடுக்கும் பூஜை பொருட்களை வாங்கி பொங்கல் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது அதனை அமல்படுத்தாமல் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை முன்னிலையில் பாகுபாடு பார்த்து பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை அறங்காவலர் அழகப்பன் வாங்க மறுத்து விட்டார்.

இதனால் 5 கிராம பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையினர் முன்னிலையில் அறங்காவலர் அழகப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் பேசி காவல்துறை அனுப்ப முடிவு செய்திருந்தாலும் அங்குள்ள சிலர் தாங்கள் கொண்டு வந்த பொங்கல் சாமான்களை வைத்து பொங்கல் வைத்து அய்யனார் சாமிக்கு படையல் வைக்க காவல்துறை அனுமதி மறுத்து விட்டது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து அவர்கள் படையில் வைக்காமல் பொங்கல் பானையை எடுத்துச் சென்றனர்.இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் தலையிட்டு ஐந்து கிராம பொதுமக்கள் பொங்கல் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அழகப்பனிடம் இருந்து அறங்காவலர் பதவியை ரத்து செய்ய வேண்டும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக கோவில் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வி பெரியகுளம் பாறைப்பட்டி மாணிக்கம்பட்டி சாரந்தாங்கி வெள்ளையம்பட்டி பொதுமக்கள் வேண்டுகோள்விடுகின்றனர்.

கிராம பொதுமக்கள் ஒற்றுமையாக சாமி கும்பிட வேண்டும் பொங்கல் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பூஜை பொருட்களை கொடுக்க முன்வந்தும் அறங்காவலர் அழகப்பன் பூஜை பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். மேலும் அய்யனார் கோவில் பாறைப்பட்டிக்கு மட்டுமே சொந்தமானது என அதிகார தோரணையில் அறங்காவலர் அழகப்பன் பேசி வருகிறார்.
இது குறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில் உள்ளூர் திமுக பிரமுகரின் தூண்டுதலில் அறங்காவலர் அழகப்பன் செயல்படுவதாகவும் கோவில் நிலங்களை கையகப்படுத்தி அதன் மூலம் வருமானத்தை பெருக்கி வருவதாகவும் இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து ஐந்து கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.







; ?>)
; ?>)
; ?>)