• Tue. Sep 17th, 2024

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாள் விழா

Byகாயத்ரி

Jan 18, 2022

மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளுக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் திருமலை நாயக்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் கம்ம நாயுடு மகாஜன சங்கம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாமன்னர் திருமலை நாயக்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சீத்தாராமன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தமிழ்செல்வன், கழக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் பூலாங்கல் சீத்தீக், திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், நரிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூமிநாதன், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை தலைவர் கேஸ்குட்டி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் குணராகவன், சாத்தூர் நகர கழக பொருளாளர் குமார், Ex-சாத்தூர் நகர கழக துணை செயலாளர் குருசாமி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் சசி ஹவுசிங் போர்டு கிளை கழக செயலாளர் கண்ணன், சாத்தூர் யாதவர் சங்க தலைவர் வேல்ச்சாமி, தென்னிந்திய நாயுடு சங்க தலைவர் வெங்கடேசன் நாயுடு சங்க இளைஞரணி தலைவர் சதீஷ், நாயுடு சங்க பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மூர்த்தி மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *