


டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் 2021 போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். 1980ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து இந்த சாதனை நடைபெற்றுள்ளது.
1928ம் ஆண்டு முதல் 1956 வரை இந்திய ஹாக்கிய அணி வீரர்களுக்கு பிறகு இந்திய அணி 6 முறை தங்கம் வென்றிருக்கிறது. மாஸ்கோ ஒலிம்பிக்குக்கு பிறகு இந்திய அணி உலக அரங்கில் சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் டோக்யோ ஒலிம்பிக்கில் நமது அணியினர் விளையாட்டு பரவலாக பேசப்பட்டு பரபரப்பாக பேசப்படுகிற அளவிற்கு சாதனை புரிந்துள்ளது.

5க்கு 4 என்ற கோல் கணக்கில் ஜெர்மன் அணியுடன் மோதி வெற்றி பெற்ற ஆடவர் அணி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றது. ஆகஸ்ட் 5ம் தேதி காலை நாடு முழுவதும் உள்ளவர்கள் இந்த போட்டியில் விறுவிறுப்பான கடைசி 6 நொடிகளை கூர்ந்து கவனித்தன. இந்தியாவில் பொதுவாகிரிக்கெட் விளையாட்டுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். ஹாக்கி விளையாட்டை யாரும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை இழந்து வந்த நிலையில் ஹாக்கி ஆடவர் மகளிர் அணிகளின் விளையாட்டை தேசமே கவனித்தது. ஆஸ்திரேலியா பெல்ஜியம் அணிகளுடன் விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நமது ஆடவர் அணி இந்த முறை வீறு கொண்டு விளையாடி வெற்றியை பெற்றுள்ளது. அதனை நாடே வியந்து பாராட்டியது என்றால் அது மிகையாகாது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பாதுகாப்பு வளையம் மிக வலிமையாக இருந்ததால் ஜெர்மணியால் கோல் போட முடியாத நிலை இருந்தது. 5க்கு 4 என்ற கோல் கணக்கில் இருந்த போது எப்படியாவது இன்னொரு கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலை பெற்றுவிட வேண்டும் என்ற நிலையில் தீவிரம் காட்டிய ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டம் நமது வீரர்களிடம் பலிக்கவில்லை. இந்த அணியின் பாதுகாப்பு வளையத்தை உடைக்க எவ்வளவு முயன்றும் ஜெர்மணியால் முன்னேற முடியாத நிலை. அந்த பரபரப்பு ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் கண்டு கழித்தனர்.
ஆடவருக்கு சளைத்தல்ல மகளிர் அணி ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெறுவது கடினமானது. இந்நிலையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதி அரை இறுதிக்கு தகுதி பெற்றுஉள்ளது. இதே போல இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளனர். 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மகளிர் ஹாக்கி அணி அரை இறுதியில் அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது. ஆடவர் அணி பெல்ஜியம் அணியுடன் அரை இறுதியில் மோத உள்ளது.

