• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பயங்கர துப்பாக்கிச் சண்டை…. உ.பியில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ByP.Kavitha Kumar

Jan 21, 2025

உத்தரப்பிரதேசத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் இன்று அதிகாலை சிறப்பு போலீசாருக்கும், குற்றவாளிகள் 4 பேருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது,

இந்த என்கவுன்டரில் முஸ்தபா கக்கா கும்பலைச் சேர்ந்த அர்ஷத், மஞ்ஜீத், சதீஷ் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த காவல்துறை ஆய்வாளர் சுனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரான அர்ஷத் ஒரு கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாவார். அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு என போலீசார் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.