• Sat. Apr 20th, 2024

புல்வாமா தியாகிகளுக்கு 3 ஆம் ஆண்டு அஞ்சலி..

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் பயனாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இன்று 3 வது ஆண்டு வீர வணக்கம் நாள் என்பதால் இணையதளத்தில் அவர்களின் தியாகத்திற்கு மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதுகுறித்த ஹேஸ்டேக் டிரெண்டிங்க் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *