• Fri. Mar 29th, 2024

கேரளாவில் 3-வதாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்

ByA.Tamilselvan

Jul 22, 2022
   உலக முழவதும் பரவிவரும் குரங்கு காய்ச்சல் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் ஏற்கனவே 2 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 வது ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதியானது. இதன்மூலம், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3-வது நபர் இவராவார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ்கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *