• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மீண்டும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா..!

ByA.Tamilselvan

Jul 22, 2022

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.அதே போல அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தொற்று உறுதியான நிலையில், விருதுநகரில் உள்ள தனது வீட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.