• Thu. Apr 25th, 2024

கருணாநிதிக்கு பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம்

ByA.Tamilselvan

Jul 22, 2022
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதிக்குமெரினா கடலில் பிரமாண்டமான பேனா நினைவுச்சின்னம் அமைக்கபடுகிறது.

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.
இந்த கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது. கிட்டத்தட்ட ரூ.80 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது. மெரினாவில் வங்க கடலில் பேனா நினைவு சின்னம் எழுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எழுத்தாற்றல் மிக்கவரான கருணாநிதி பல நூல்களை எழுதியவர். அவர் தமிழுக்கு, இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் நடுக்கடலில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நினைவு சின்னம் வங்க கடலில் அமையும் போது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *