• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு..,

ByK Kaliraj

Oct 17, 2026
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வனமூர்த்தி லிங்கபுரம் முருகன் என்பவருக்கு சொந்தமான  கார்த்திகா பட்டாசு ஆலையில்  கடந்த 14-ம் தேதி பட்டாசு தயாரிக்க தேவையான ரசாயன மூலப் பொருட்களை சரக்கு லாரியிலிருந்து வெடி பொருட்கள் சேமிப்பு கிடங்கில் இறக்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த வெடி விபத்தில் ரசாயன மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கு முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. இதில் சரக்கு வாகனம் எரிந்து சேதமானது.  இந்த வெடி விபத்தில் ரசாயன மூலப்பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த நாரணாபுரம் புதூரைச் சேர்ந்த புலித்துரை (வயது 36) என்பவர்  100% தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் கார்த்திகாஸ் பட்டாசு ஆலையின் மேலாளர் அருள் பிரசாத் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.