• Mon. May 29th, 2023

ஆதரவற்ற மனிதரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 3000 மக்கள்

Byமதி

Nov 19, 2021

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஆதரவற்ற மனிதரின் இறுதி ஊர்வலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நீண்ட ஆண்டுகளாக ஹடகலி நகரில் வசித்து வந்துள்ள, 45 வயதான பசவா மனநிலை பாதிப்புடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்றாலும், அவர் மக்களிடம் துன்புறுத்தாமல், பார்போரிடம் ஒரு ரூபாய் மட்டுமே யாசகமாக கேட்டு பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்கு மேல் ஒரு பைசா கூட வாங்க மறுத்து விடுவாராம். கூடுதலாக கொடுத்தாலும் அதற்கான சில்லறையை சரியாக அவர்களிடமே கொடுத்து விடுவாராம்.

இந்நிலையில், அவர் சாலை விபத்தில் மரணம் அடைந்த செய்தியை கேட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மனிதத்துவத்திற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

தனது சொந்தங்களையே வெறுத்து ஒதுக்கும் இந்த காலகட்டத்தில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *