பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதே சமயம் 50 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெஷாவர் மசூதியில் இன்று தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் அங்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புக் குழுவினருடன் அருகில் இருந்தவர்களும் காயமடைந்தவர்களுக்கு உதவினர். காயமடைந்த 50 பேரில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அப்பகுதியை அப்புறப்படுத்தி விசாரணை தொடங்கினர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு பேர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதலில் இருவரும் மசூதிக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது தடுத்து நிறுத்திய போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டனர். குண்டுவெடிப்புக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். இந்த மசூதி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான் , பெஷாவர் முதல்வர் மெஹ்மூத் கானும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.